11.04.2021 | சுகம் ஒரு சுதந்தரம் – 9 | Rev. Solomon

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2). 

 

எந்த கல்வாரியில் தேவன் நமக்காக பரிசுத்தத்தை சம்பாதித்தாரோ அதே கல்வாரியில் நமக்கு ஆரோக்கியத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார். எந்த கல்வாரியில் தேவன் நமக்காக ஐசுவரியத்தை சம்பாதித்தாரோ அதே கல்வாரியில் நமக்கு சுகத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார். பரிசுத்தம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல ஆரோக்கிய வாழ்வும் மிகவும் முக்கியம். பரிசுத்தமும் ஆரோக்கிய வாழ்வும் எவ்வளவு முக்கியமோ அதைப்போல ஐசுவரியம் முக்கியம். இவை எதுவும் ஒன்றுக்கொன்று குறைவானது அல்ல. ஏனென்றால் எல்லாவற்றுக்காகவும் ஒரே கிரயம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிரயம் கொடுத்து சுகவாழ்வு, நல்வாழ்வு போன்ற இந்த சுதந்தரங்களை நமக்காக சவதரித்து வைத்திருக்கிறார். இன்றைக்கு நாம் அதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். நாம் வாழ்ந்து சுகமாயிருக்க நம் தேவன் விரும்புகிறார். அது அவருடைய சித்தம். அதற்காக அவர் எல்லாவற்றையும் செய்து முடித்திருக்கிறார். அவர் நமக்காக சவதரித்து வைத்திருக்கிற நன்மைகளை நாம் எப்படி சுதந்தரிக்கப்போகிறோம் என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

 

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (மத்தேயு 5:5). 

 

“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” (சங்கீதம் 37:11). 

 

இன்றைக்கு அநேக ஆவிக்குரிய மக்கள், பரலோகம் போன பிறகுதான் நமக்கு நல்வாழ்வு ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறார்கள். அது உண்மையில்லை, தேவன் இந்த பூமியிலேயே நமக்கு நல்வாழ்வை வைத்திருக்கிறார். அவர் பூலோக சுதந்தரத்தையும் வைத்திருக்கிறார், பரலோக சுதந்தரத்தையும் வைத்திருக்கிறார். அநேகருக்கு இது தெரியவில்லை. அதனால் அவர்கள் இதை நழுவவிட்டு விடுகிறார்கள். இதை நாம் தெரிந்துகொண்டு, சுதந்தரிக்க வேண்டும். நாம் இதை சுதந்தரிக்காமல் பரலோகத்திற்குச் சென்றால் அங்கு சென்றவுடனேயே எல்லாம் விளங்கிவிடும். ஏனென்றால் நாம் சுதந்தரிக்காமல் விட்டதற்குக் காரணம் கர்த்தர் அல்ல. அவர் ஏற்கனவே எல்லா நன்மைகளையும் சவதரித்து வைத்திருக்கிறார். நாம் தான் அதை கவனிக்காமல், அறிந்துக்கொள்ளாமல், வசனத்தைப் பற்றிக்கொள்ளாமல், விசுவாசித்து சுதந்தரிக்காமல் விட்டு விட்டோமே ஒழிய, கர்த்தர் நமக்கு கொடுக்காததினால் அது நமக்கு கிடைக்காமல் போகவில்லை. ஆகவே பரலோகம் போனவுடன் யாரும் கர்த்தரை குற்றஞ்சாட்ட முடியாது. அவர் குற்றஞ்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் எல்லா பாடுகளையும் பட்டு எல்லா நன்மைகளையும் ஏற்கனவே சவதரித்து வைத்துவிட்டார். இப்போது நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது.

 

கர்த்தர் இந்த பூமியிலே வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரித்து, அவருக்கு மகிமையாக வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதைப் புரிந்துகொண்ட ஊழியக்காரர்கள் இதிலே வைராக்கியமாக இருக்கிறார்கள். மோசே அவர் பழைய ஏற்பாட்டு போதகர். அவருடைய சபையில் 30 லட்ச ஜனங்கள் இருந்தார்கள். அவர் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்குவதற்கு முன்பதாக அவர்களிடம் போய் பேசுகிறார். அவர்களிடம் பேசும்போது, தேவன் உங்களை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பேன் என்று சொல்லி அவர் இறங்கி வந்துவிட்டார்; அவர் வேலை செய்துகொண்டிருக்கிறார். ஆகவே நீங்கள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின்மேல் விசுவாசம் வையுங்கள். அப்போது தேவன் உங்களை விடுதலையாக்குவார். கர்த்தர் உங்களை என்னுடைய தலைமையின் கீழாக பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் கொண்டுபோய் சேர்ப்பார். என் பின்னே வாருங்கள் என்று கூப்பிட்ட மாத்திரத்தில் இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறார்கள், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். கர்த்தர் அற்புதங்களைச் செய்கிறார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை உண்டாகிறது. அவர்கள் எகிப்திலிருந்து பிரயாணப்பட்டு வரும்போது செங்கடல் அவர்களுக்கு முன்பாக நிற்கிறது, பின்னால் பார்வோனின் சேனை வருகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நாம் மோசேயின் பின்னால் போவோம், அவர் நம்மை நடத்திச் செல்லுவார், பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் கொண்டுபோய் சேர்த்து விடுவார் என்று நம்பித்தான் அவர்கள் வந்தார்கள். ஆனால் இப்போது முன்னால் செங்கடலும், பின்னால் பார்வோனின் சேனையும் நிற்கிறது. இரண்டிற்கும் இடையே நாம் மாட்டிக்கொண்டோமே என்று சொல்லி அவர்கள் திகைத்து, அங்கலாய்த்து, பயந்து என்ன பேசினார்கள் என்று பாருங்கள்.

 

“நாங்கள் எகிப்திலே இருக்கும் போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலைசெய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்” (யாத்திராகமம் 14:12).

இன்றைக்கும் அநேக கிறிஸ்தவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள், பாஸ்டர், எங்களை சும்மா விட்டு விடுங்கள். நாங்கள் ஏழைகளாகவே இருந்து விடுகிறோம், கீழான மடங்கடிக்கப்பட்ட வாழ்க்கையையே வாழ்ந்துவிட்டுப் போய் விடுகிறோம் என்று எண்ணுகிறார்கள். ஜனங்கள் அப்படிச் சொன்னதற்கு மோசே என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்.

 

“அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்” (யாத்திராகமம் 14:13-14).

 

ஜனங்கள் மோசேயிடம், எங்களை சும்மா விட்டுவிடும் என்றார்கள். ஆனால் மோசே, நான் உங்களை சும்மா விடமாட்டேன். உங்களுக்கு கர்த்தருடைய வார்த்தையைப் போதித்து, ஆவியானவருடைய வல்லமைக்குள் உங்களைக் கொண்டுவந்து, உங்கள் மனதில் இருக்கிற அவிசுவாசங்கள், சந்தேகங்கள் எல்லாவற்றையும் களைந்து, உங்களை விசுவாசத்திற்குள் நடத்தி, தேவன் உங்களுக்கு வைத்திருக்கிற பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை சுதந்தரிக்கப்பண்ணுகிற வரைக்கும் நான் உங்களை சும்மா விடமாட்டேன் என்கிறார். இவர் எப்பேர்ப்பட்ட பாஸ்டர் என்று பாருங்கள்!

 

பூமிக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதற்கு சாந்தகுணமும், தாழ்மையும் அவசியம் என்று இயேசு போதிக்கிறார். சாந்தகுணம் என்பது தெய்வீக சுபாவம். மறுபடியும் பிறந்த நாம் இந்த தெய்வீக சுபாவத்தை உடையவர்களாய் இருக்கிறோம். நாம் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பிசாசின் சுபாவங்கள் நிறைந்தவர்களாய் இருந்தோம். அது மாம்சத்துக்குட்பட்ட, மாம்சீகமான சுபாவங்கள் நிறைந்த ஒரு வாழ்க்கை. அதைப் பற்றி வேதம் சொல்லுவதைக் கவனியுங்கள்.

 

“ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும். அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்” (தீத்து 3:3).

 

முன்பு நம்முடைய வாழ்க்கை மாம்சத்துக்குட்பட்ட பிசாசின் சுபாவம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தது. ஆனால் கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாம் இயேசுவை சந்தித்துவிட்டோம், இரட்சிக்கப்பட்டுவிட்டோம். அவர் என்றைக்கு நம் உள்ளத்திற்குள் வந்தாரோ அன்றைக்கு பழைய பிசாசின் சுபாவம் நிறைந்த ஆவியை எறிந்துவிட்டு மெய்யான பரிசுத்தத்திலும், நீதியிலும் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை கர்த்தர் நம் உள்ளத்திற்குள்ளே வைத்துவிட்டார். ஆகவேதான், “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், அவன் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” என்று வேதம் சொல்லுகிறது. இன்றைக்கு நாம் இந்த தெய்வீக சுபாவத்தை உடையவர்களாய் இருக்கிறோம்; தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். ஆகவேதான் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதும்போது, “பிரியமானவர்களே, நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே தேவன் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்” என்று எழுதுகிறார். அப்படியென்றால் அப்பாவோடு ஐக்கியம்கொள்ளுகிற ஒரு நிலை, அப்பாவுடைய வார்த்தையோடு பழகுகிற பழக்கம், அப்பாவுடைய ஆவியானவரோடு பழகுகிற ஒரு பழக்கம் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும். இவைகள் தெய்வீக சுபாவத்திலே வளருவதற்கு நமக்கு உதவி செய்யும். நாம் தெய்வீக சுபாவத்திலே வளராத வரைக்கும் பெரிய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க முடியாது. ஆசீர்வாதங்கள் நமக்காகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் தெய்வீக சுபாவத்திலே வளராமல் மாம்சீகமானவர்களாகவே இருந்தோம் என்றால் பெரிய ஆசீர்வாதங்கள் நமக்கு வந்து கிடைக்காது. ஆகவேதான் ஆவிக்குரியவர்களோடு நல்ல உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

 

கர்த்தருடைய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பது ரொம்ப கடினமான காரியம் அல்ல. ஆனால் நம்முடைய கண்ணோட்டமும், வாஞ்சையும், தாகமும் தெய்வீக சுபாவத்திற்கு ஏதுவாக இருக்குமானால் ஆசீர்வாதங்கள் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும். நீங்கள் வேண்டாம் என்று ஓடினாலும் அது உங்களை விரட்டிப் பிடிக்கும். தெய்வீக சுபாவம் ஆசீர்வாதங்களை கவர்ந்திழுக்கிறது. காந்தம் இரும்பை கவர்ந்திழுப்பதைப்போல சாந்தகுணம், தாழ்மை, அன்பிலே நடக்கிற ஒரு நடையானது கர்த்தரை நம்முடைய சார்பாக கவர்ந்திழுக்கிறது. கர்த்தர் நம்முடைய சார்பிலே வந்துவிட்டார், அவர் நம்முடைய சார்பிலே கிரியை செய்கிறார் என்றால் தீமைகள் ஓடிப்போய், நன்மைகள் பெருக ஆரம்பித்துவிடும்.

 

ஆபிரகாம் கர்த்தருடைய பெரிய ஆசீர்வாதங்களை சுதந்தரித்த ஒரு மனுஷன்.

 

“ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்” (ஆதியாகமம் 24:1).

 

வாழ்க்கை என்பது பல அம்சங்கள் அடங்கியது. ஆவி, ஆத்துமா, சரீரம், குடும்பம், பொருளாதாரம், சமுதாய வாழ்வு என்று பல அம்சங்கள் அடங்கியதுதான் வாழ்க்கை. வெறும் ஒரு அம்சம் மட்டும் ஆசீர்வதிக்கப்படுவது தேவனுடைய சித்தமல்ல, எல்லா அம்சங்களும் ஆசீர்வதிக்கப்படுவதுதான் தேவனுடைய சித்தம். God is a God of total man, தேவன் ஒட்டுமொத்த மனுஷனுக்கும் தேவனாயிருக்கிறார். நீங்கள் ஒட்டுமொத்த செழிப்பை உடையவர்களாக இருக்கும்படி தேவன் விரும்புகிறார். ஏதோ ஒரு அம்சத்தில் மட்டும் நன்றாக இருப்பது என்றல்ல. எல்லா அம்சங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் கர்த்தருடைய சித்தம்.

 

தேவன் ஆபிரகாமை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார். அவன் ஏழையாக பிறந்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்து பணக்காரனாக மாற்றினார். பிள்ளை இல்லாமல் இருந்தான், கர்த்தர் அவனுக்கு பிள்ளைகளைக் கொடுத்தார். அவனுக்கு எதிராக எதிரிகள் வந்தார்கள், அவர்கள் அத்தனை பேரையும் ஜெயிப்பதற்கு கர்த்தர் அவனுக்கு உதவி செய்தார். கர்த்தர் அவனை ஆரோக்கியத்தினால் நிரப்பினார், அவன் நீடித்து வாழ்ந்தான் என்று அவனைக் குறித்து வாசிக்கிறோம். கர்த்தர் அவனை ஆசீர்வதித்து சீமானாக மாற்றினார். அப்படியென்றால் என்ன அர்த்தம் என்றால், ஆபிரகாம் பெரிய அளவிலே தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொண்டான். எப்படி சுதந்தரித்தான்? அதற்கு வேதம் சொல்லும் மிக முக்கிய காரணம் விசுவாசம். ஆனால் அந்த விசுவாசத்தை பெலப்படுத்துவதற்கு அவனுக்குள் தெய்வீக சுபாவம் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது. அவன் தெய்வீக சுபாவத்தை உடையவனாய் இருந்தான். அவன் சாந்தகுணமுள்ளவனாய், அன்பிலே நடக்கிறவனாய், தாழ்மையுள்ளவனாய் இருந்தான். அது அவனுடைய விசுவாசத்திற்கு ஊன்றுகோலாய் இருந்தது. அது தேவனுடைய பெரிய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதற்கு அவனுக்கு உதவி செய்தது.

 

“ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்” (ஆதியாகமம் 13:7-9).

 

ஆபிரகாம் எப்படிப்பட்டவனாய் இருக்கிறான் என்று பாருங்கள். ஆபிரகாமுக்கும் லோத்துவுக்கும் இரண்டு பேருக்குமே ஆசீர்வாதங்கள் உண்டாயிருந்தது. ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும், லோத்தினுடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது. உடனே ஆபிரகாம் அங்கு வருகிறார். அவர் லோத்துவைக் கூப்பிட்டு, என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம், நாம் சகோதரர். நம் அப்பா பிதாவாகிய தேவன். அவர் அகில லோகத்திற்கும் சொந்தக்காரர். நாம் அவருடைய பிள்ளைகள். நாம் சண்டைபோடக்கூடாது. நாம் சண்டைபோட்டால் அது அவருக்கு அவமானம். நம்மைச் சுற்றியிருக்கிறவர்கள் அஞ்ஞானிகள். இவர்களுக்கு முன்னால் நாம் சண்டைபோட்டுக் கொண்டிருந்தால் அது சாட்சிக்கேடு. நாம் அப்படி செய்யக்கூடாது. ஆகவே எனக்கும் உனக்கும் வாக்குவாதம் வேண்டாம். நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன். நீ வலதுபுறம் போனால் நான் இடதுபுறம் போகிறேன் என்று சொல்லுகிறார். எப்பேர்ப்பட்ட சாந்தகுணம் என்று பாருங்கள்! இவ்விதமாக ஆபிரகாம் லோத்துவுக்கு விட்டுக் கொடுக்கிறான். ஆபிரகாம் மாம்சீகமான மனுஷனாக இருந்திருந்தால் எதையும் விட்டுக் கொடுத்திருக்கமாட்டான். நீ என் கூட வந்ததினால் தானே கர்த்தர் உன்னை இப்படி ஆசீர்வதித்தார், நான் இல்லையென்றால் உனக்கு இதெல்லாம் கிடைத்திருக்காதே, என்னால் தான் உனக்கு ஆசீர்வாதம் வந்தது, ஆனால் இப்போது நீ என்னோடு சண்டைபோடுகிறாயே, நான் உன்னை என்ன பண்ணுகிறேன் பார் என்று சொல்லி ஆட்களை ஏவிவிட்டு லோத்துவை விரட்டியிருக்கலாம். ஆனால் ஆபிரகாம் அப்படி பண்ணவில்லை. அவன் அப்படிச் செய்திருந்தால் அது மாம்சீகமான வழி. அவன் வெறும் மாம்சீகமான மனுஷனாய் இருந்திருப்பான். தேவனிடத்திலிருந்து அவனுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது. அவன் பெரிய ஆசீர்வாதங்களை சுதந்தரித்திருக்கவே முடியாது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாய் இருக்கமாட்டார்கள் என்று வேதம் சொல்லுகிறது.

 

“மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” (ரோமர் 8:13).

 

அன்றைக்கு ஆபிரகாம் மாம்ச வழிகளைத் தெரிந்துகொண்டு, லோத்துவோடுகூட மாம்சீகமாய் சண்டைபோட்டு அவனை விரட்டியிருந்தால் இவனும் எதையும் சுதந்தரித்திருக்கமாட்டான். ஆனால் அவனோ, நீ எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள், கர்த்தர் என்னோடுகூட இருக்கிறார் என்று அன்பின் வழியைத் தெரிந்துகொண்டு சாந்தகுணத்தை வெளிப்படுத்துகிறான். அதுமட்டுமல்ல, லோத்துவுக்கு எந்த உணர்வும் இல்லை. இவன் பண ஆசைக்காரன். ஆபிரகாம் எவ்வளவு பெரிய ஆவிக்குரிய மனுஷன், அவனைவிட்டு இவன் பிரிந்துபோகலாமா? நல்ல உணர்வுள்ளவர்கள் அப்படி பிரிந்துபோகமாட்டார்கள். ஏதாவது ஒரு பிசகு ஏற்பட்டால் கூட மன்னிப்பு கேட்டு திரும்பவும் சேர்ந்துகொள்ளுவார்கள். ஆனால் இவன் ஆபிரகாமோடு உள்ள உறவை பெரிதாக நினைக்கவில்லை. தனக்கு பணம் கிடைத்தால் போதும் என்று பிரிந்துபோகிறான். லோத்து கொடிய பாவிகள் வாழுகிற சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேராகப்போய் கூடாரம்போட்டான் என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் ஆபிரகாமிடம் பேசுகிறார். அவர் அவனை தன் நண்பனாக பார்க்கிறார். நான் செய்யப்போவதை என் நண்பனுக்கு சொல்லாமல் செய்யமாட்டேன் என்று ஆபிரகாமோடு நட்பாக பேசுகிறார். நான் சோதோம் கொமோரா பட்டணத்தை அழிப்பதற்காக வந்திருக்கிறேன் என்கிறார். லோத்து ஆபிரகாமை விட்டுப் பிரிந்துபோய், இருப்பதிலேயே நலமானதைத் தெரிந்துகொண்டு, நல்ல பசுமையான புல்வெளிகளைத் தெரிந்துகொண்டு அங்கு கூடாரம்போட்டான். இப்படிப்பட்ட நிலையில் பொதுவாக நாம் எப்படி நினைப்போம் என்றால், உனக்கு அழிவு வந்துவிட்டது, நீ என்னை விட்டுப் பிரிந்துபோனாய் அல்லவா? இருப்பதிலேயே சிறந்ததை எடுத்துக்கொண்டு போனாய் அல்லவா? உனக்கு இது வேண்டும், ஆண்டவரே, சீக்கிரமாக அழித்துப்போடும் என்று சொல்லியிருப்போம். ஆனால் ஆபிரகாம் எப்பேர்ப்பட்ட தெய்வீகமான மனுஷனாய் இருந்திருக்கிறான் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது! ஆண்டவரே, சோதோம் கொமோரா பட்டணத்தை அழிக்கப்போகிறீரா? என் இனத்தான் ஒருவன் அங்கு இருக்கிறானே, அவன் குடும்பமாய் அழிந்துபோய்விடக்கூடாதே, 50 நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பீரா? என்று கேட்கிறான். அதற்கு அவர், அழிக்கமாட்டேன் என்கிறார். 45 நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பீரா? என்று கேட்கிறான். அதற்கு அவர், அழிக்கமாட்டேன் என்கிறார். 40 நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அழிப்பீரா? என்று கேட்கிறான். அதற்கு அவர், அழிக்கமாட்டேன் என்கிறார். இவன் என்ன கேட்க வருகிறான் என்று ஆண்டவருக்கு தெரிந்துவிட்டது. இவனுக்கு எவ்வளவு தைரியமான சுபாவம் இருக்கிறது என்று பாருங்கள்! மக்கள் எப்படி ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கிறார்கள் எ

Book your tickets